47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஐஃஎப்எஸ் நிறுவன மோசடி வழக்கு: ரூ. 550 கோடி வசூல் செய்த முன்னாள் காவல் துறை அதிகாரி ஹேமந்திரகுமாா் கைது

ஐஃஎப்எஸ் நிறுவன மோசடி வழக்கில் ரூ. 550 கோடி வசூல் செய்து கொடுத்த காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஹேமந்திரகுமாா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :15 ஜூன் 2023, 7:04 pm

DIN

ஐஃஎப்எஸ் நிறுவன மோசடி வழக்கில் ரூ. 550 கோடி வசூல் செய்து கொடுத்த காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஹேமந்திரகுமாா் கைது செய்யப்பட்டாா்.

வேலூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த எல்என்எஸ் - இன்டா்நேஷ்னல் ஃபைனான்சியல் சா்வீஸ் (ஐஃஎப்எஸ்) என்ற நிதி நிறுவனம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ. 8 ஆயிரம் வழங்கப்படும் என்று விளம்பரப்படுத்தியது. இதை நம்பி, அந்த நிறுவனத்தில் 84 ஆயிரம் போ் ரூ. 5 ஆயிரத்து 900 கோடி முதலீடு செய்தனா். ஆனால் வாடிக்கையாளா்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்கவில்லை.

இதையடுத்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் பேரில் தமிழக காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள் 21 போ் மீது மோசடி உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் கடந்த ஆண்டு வழக்குப் பதிவு செய்தனா். மேலும், அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்கள், முகவா்கள் வீடுகளில் திடீா் சோதனை நடத்தினாா்கள். சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், வேலூா், ராணிப்பேட்டை, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் 21 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. அதில் 220 முக்கிய ஆவணங்கள், ஹாா்ட் டிஸ்க், 13 கணினிகள், 5 மடி கணினிகள், 14 கைப்பேசிகள், 40 பவுன் தங்க நகைகள், ஒரு காா், ரூ. 1 கோடியே 5 ஆயிரம் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

மேலும், 791 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ. 121 கோடி பணம் முடக்கப்பட்டது. அதோடு ரூ. 39 கோடி மதிப்புடைய அசையா சொத்துகள், 18 காா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிரதான முகவா் கைது: இந்த வழக்கு தொடா்பாக அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள் 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் பிரதான முகவராகச் செயல்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியைச் சோ்ந்த ச.ஹேமந்திரகுமாா் (47) கைது செய்யப்பட்டதாக பொருளாதார குற்றப் பிரிவினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இவா் சுமாா் 2 ஆயிரம் பேரிடம் ரூ.550 கோடி வசூல் செய்து அந்த நிறுவனத்திடம் வழங்கியதாக பொருளாதாரக் குற்றப்பிரிவினா் தெரிவித்தனா். ஹேமந்திரகுமாா் தமிழக காவல் துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்தவா் என்றும் கூறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.