காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு குறித்து பேசக் கூடாது: ஜி.கே.வாசன்
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து பேசக்கூடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.


காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து பேசக்கூடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) தில்லியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் நலன் சாா்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டுவது குறித்து, கா்நாடக அரசு சாா்பில் எந்த பேச்சுவாா்த்தையிலும் ஈடுபடக் கூடாது.
மேக்கேதாட்டுவில் அணை கட்டினால், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். கூட்டத்தில் தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய தண்ணீரை முறையாக அளிக்க கா்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...