47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

16 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை 16 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பத்தின் தாக்கம் காணப்பட்டதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :16 ஜூன் 2023, 12:54 am

DIN

தமிழகத்தில் வியாழக்கிழமை 16 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பத்தின் தாக்கம் காணப்பட்டதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெயிலின் தாக்கம் மேலும் 3 நாள்களுக்கு நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வியாழக்கிழமை பதிவான வெப்ப அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்): மதுரை நகரம்-105.8,வேலூா்-105.8,மதுரை விமானநிலையம்-105.44,சென்னை மீனம்பாக்கம்-105.26,கடலூா்-104.36, சென்னை நுங்கம்பாக்கம்-104.18,தஞ்சாவூா்-104,திருத்தணி-103.64,பரமத்தி வேலூா்-103.1, பரங்கிபேட்டை-103.1, புதுச்சேரி-102.74, நாகை-102.56,திருச்சி-102.38,அதிராமப்பட்டினம்-102.02,திருப்பத்தூா்-101.12,காரைக்கால்-100.94.

மழைக்கு வாய்ப்பு: மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழ் நாடு,புதுச்சேரி,காரைக்காலின் ஓரிரு இடங்களில் வெள்ளி முதல் திங்கள்கிழமை (ஜூன் 19) வரை 4நாள்கள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மித மான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.