தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

73 ஆண்டுகளில் பெய்த 3வது அதிக கனமழை: எங்கு தெரியுமா?

தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :19 ஜூன் 2023, 7:39 am

DIN

தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்திவந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(ஜூன்19) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

சென்னையில் பெய்துவரும் கனமழையால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 16 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. இது கடந்த 73 ஆண்டுகளில் பெய்த 3வது கனமழை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் இயல்பு அளவு 4 செ.மீட்டரை விட 163 சதவீதம் அதிகமாக 10.3 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம், செம்பரம்பாக்கத்தில் 11 செ.மீ, சென்னை அண்ணா பல்கலையில் 10 செ.மீ அளவும் மழைப் பதிவாகியுள்ளது.  

சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் 2 நாள்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.