தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சென்னையில் மழைநீர் தேக்கம்: தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக மழைநீர் தேங்கியுள்ளதால் சென்னை சென்ட்ரலில் புறப்பட வேண்டிய 7 ரயில்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

News image
தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Updated On :19 ஜூன் 2023, 10:12 am

DIN

சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக மழைநீர் தேங்கியுள்ளதால் சென்னை சென்ட்ரலில் புறப்பட வேண்டிய 7 ரயில்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முக்கிய 2 இருப்புப் பாதைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கியுள்ளதால் ஆவடி, திருத்தணி, திருவள்ளூர் பகுதிகளில் இருந்து ரயில் இயக்கப்படும் எனத் தகவல் தெரிவித்துள்ளது. 

அதன்படி, வியாசர்பாடி-பேசின்பிரிட்ஜ் இடையேயான பாலம் என் 14-ல் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

மாற்றப்பட்ட ரயில்களின் பட்டியல்

1. சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய மைசூரு விரைவு ரயில் ஆவடியில் இருந்து புறப்படும். 

2. சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய திருப்பதி எக்ஸ்பிரஸ் திருவள்ளூரில் இருந்து புறப்படும்.

3. சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய கோவை செல்லக்கூடிய இன்டர்சிட்டி விரைவு ரயில் ஆவடியில் இருந்து புறப்படும். 

4. சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய மும்பை சிஎஸ்டி விரைவு ரயில் திருவள்ளூரில் இருந்து புறப்படும். 

5. சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய கோவை செல்லக்கூடிய வந்தே பாரத் ரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து  புறப்படும். 

6. சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய சிமோகா சிறப்பு ரயில் திருவள்ளூரில் இருந்து புறப்படும். 

7. சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய கே.எஸ்.ஆர் லால்பாக் விரைவு ரயில் ஆவடியில் இருந்து புறப்படும்

மேலும் விரிவான தகவல்களுக்கு தெற்கு ரயில்வேயின் இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.