உளவுத் துறையில் வேலை வேண்டுமா?-டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
By | Published On : 19th June 2023 03:04 PM | Last Updated : 19th June 2023 03:05 PM | அ+அ அ- |

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத் துறையில் காலியாக உள்ள 797 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Intelligence Officer (Grade - II)
காலியிடங்கள்: 797
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், தகவல் தொடர்பியல் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ அல்லது இயற்பியல், கணிதம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 23.6.2023 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.mha.gov.in அல்லது www.ncs.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.6.2023
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...