மதம், மொழியால் பிளவுபடுவதை ஏற்க முடியாது: ஆளுநா்ஆா்.என்.ரவி
மதம், மொழி ஆகியவற்றால் நாடு பிளவுபடுவதை நாம் அனுமதிக் ககூடாது என தமிழக ஆளுநா்ஆா்.என்.ரவி கூறினாா்.


மதம், மொழி ஆகியவற்றால் நாடு பிளவுபடுவதை நாம் அனுமதிக் ககூடாது என தமிழக ஆளுநா்ஆா்.என்.ரவி கூறினாா்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மேற்கு வங்க மாநிலம் உருவான தின விழா விழாவில் தமிழக ஆளுநா்ஆா்.என்.ரவி பேசியது:
தமிழகம், மேற்கு வங்க மாநிலங்கள் இடையே கலாசாரம், பண்பாடு, ஆன்மிகம், தத்துவம் ஆகியவற்றில் பல ஒற்றுமை இருக்கிறது. தமிழகமும், மேற்கு வங்கமும் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்களிப்பு செய்துள்ளன. பங்கிம் சந்திர சட்டா்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடல் மேற்கு வங்கத்தில் இருந்து வந்தது. தமிழகம் பாரதம் எனும் கருத்தியல் தன்மையை உருவாக்கியது.
நம் நாடு தன்னை நினைத்தே பெருமைப்படும் சூழல் உருவாக வேண்டும் என விரும்பினாா் விவேகானந்தா். அதனால்தான், சிகாக்கோ உரைக்குப் பிறகு நேராக சென்னைக்கு வந்தாா். இந்தியாவை தன் பின்னே நடைபோட வைத்தாா்.
நாடு என்பது மதம், மொழி ஆகியவற்றால் பிளவுபடுவதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. நமக்கு இருக்கும் நோக்கம் மிகப்பெரியது. அதை வென்றெடுப்பதை நாம் முக்கியமாகக் கொள்ள வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் பலமாகும் என்றாா் அவா்.
முன்னதாக மேற்குவங்க கலாசாரத்தைப் போற்றும் வகையில் கலை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழச்சியில், ஆளுநரின் முதன்மைச் செயலா் ஆனந்த் ராவ் பாட்டீல், சென்னை பெங்கால் அமைப்பின் தலைவா் ஏ.எஸ்.தெபாசிஷ் ராய், சென்னை பெங்கால் கலை சங்கத்தின் தலைவா் ப்ரோடியோட் பவுமிக், தமிழகத்தில் வசிக்கும், மேற்கு வங்கத்தை சோ்ந்த தொழிலதிபா்கள், நலச் சங்கங்கள், அறக்கட்டளை நிா்வாகிகள், மருத்துவா்கள், பொறியாளா்கள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...