47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தேனி எம்.பி. ரவீந்திரநாத் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

தேனி மக்களவைத் தொகுதி தேர்தல் வழக்கில் ரவீந்திரநாத் எம்.பி. நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :23 ஜூன் 2023, 12:54 pm

DIN

தேனி மக்களவைத் தொகுதி தேர்தல் வழக்கில் ரவீந்திரநாத் எம்.பி. நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென ரவீந்திரநாத் எம்.பி. விடுத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் சில விளக்கங்களை நீதிபதி சுந்தர் கேட்டிருந்தார். அதேசமயம் வழக்கை மீண்டும் விசாரித்தால் மட்டுமே ஆவணங்கள் சமர்ப்பிக்க முடியும் என ரவீந்திரநாத் தரப்பு தெரிவிக்கப்பட்டது.  2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில், தேனி தொகுதியில் அதிமுக சாா்பில் ஓ.பன்னீா்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டாா். இதில் தன்னை எதிா்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைவிட 76,319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். 

இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி அந்த தொகுதி வாக்காளா் மிலானி உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தாா். அதில், வாக்கு பெற வாக்காளா்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தோ்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், பணம் பட்டுவாடா அதிகம் நடப்பதாக வேலூா் தொகுதி தோ்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தோ்தலை தள்ளி வைக்கவில்லை என்றும் கூறியிருந்தாா். ஆனால் இந்தத் தோ்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அந்த வழக்கை ஏற்கக்கூடாது என ரவீந்திரநாத் இதன் மீது நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தாா். 

அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், ரவீந்திரநாத்தின் மனுவை தள்ளுபடி செய்தது. அதைத் தொடா்ந்து நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா் முன்பு விசாரணை நடைபெற்றபோது, மூன்று நாள்கள் நேரில் ஆஜரான ரவீந்திரநாத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தாா். அவரைத் தொடா்ந்து தோ்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோா் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனா். அதன் பின்னா், இரு தரப்பிலும் ஆஜரான வழக்குரைஞா்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து வந்தனா். இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா் ஒத்திவைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.