உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி கூடுதல் மனு
செந்தில் பாலாஜி கைது குறித்த ஆட்கொணர்வு மனுவில் அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுத் தாக்கல் செய்துள்ளார்.


செந்தில் பாலாஜி கைது குறித்த ஆட்கொணர்வு மனுவில் அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் கடந்த 21-ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த நிலையில் கைது உத்தரவில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுத் தாக்கல் செய்துள்ளார். மனுவில், செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை முறையாக பிரிசீலிக்கவில்லை.
மனுவை முறையாக பரிசீலிக்காம நீதிமன்ற காவலில் வைக்க பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது. செந்தில் பாலாஜிக்கு எதிராக மத்திய அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் என பாஜக அண்ணாமலை பேசி வருகிறார். 2022 ஆகஸ்ட் முதல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செந்தில் பாலாஜிக்கு எதிராக பேசி வருகிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...