மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகத்தில் கல் குவாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் கல் குவாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது.

News image
Updated On :26 ஜூன் 2023, 7:18 am

DIN

பல்லடம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் கல் குவாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது.

தமிழகத்தில் 2000 கல்குவாரிகள், 3000 கிரசர்கள் மூலம் பல லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். நாள்தோறும் ரூ.50 கோடி மதிப்பிலான கட்டுமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில் 110 கல்குவாரிகள், 120 கிரசர்கள் இயங்கி வருகிறது.  நாள்தோறும் ரூ.10 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இத்தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர். 

இது குறித்து சங்க மாநிலத் தலைவர் கே.சின்னச்சாமி, மாநில பொருளாளர்  63 வேலம்பாளையம் கே.பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவதுச

தமிழக அரசின் பல்வேறு துறை அனுமதியுடன்  கல்குவாரி மற்றும் கிரசர் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்றும், சுற்றுச் சூழல் மற்றும் கனிம வளத் துறை அனுமதி பெற்றும், குவாரியிலிருந்து உரிய நடைச்சீட்டு பெற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கல்குவாரி தொழில் செய்து வருகின்றோம்.

கல்குவாரியிலிருந்து உற்பத்தியாகும் பொருட்கள் அனைத்தும் சாலை பணி, அரசு கட்டட பணி மற்றும் இதர அத்தியாவசிய கட்டட பணிகளின் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகின்றன.  அனைவரும் அரசிற்கு செலுத்தும் பர்மிட் கட்டணம், சீனியரேஜ் தொகை மற்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கட்டண தொகையையும்  செலுத்தி வருகிறோம்.

சட்டத்திற்கு உட்பட்டு தொழில் செய்து வருகிறோம். மேலும் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் பல கோடி கடன் பெற்று மாத தவனைகள் செலுத்தி வருகிறோம். இத்தொழில் மூலம் நேரடியாக 5 ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக 50 ஆயிரம் குடும்பங்களும் பயன் அடைந்து வருகின்றனர். 

இந்த நிலையில் சமீபகாலமாக சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சிலர் அரசு அலுவலகங்களுக்கு சென்று கல் குவாரி மற்றும் கிரசர் தொழில் குறித்து தவறான செய்திகளை புகார் மனுவாக கொடுத்து வருகின்றனர். 

கல் குவாரி உரிமையாளர்களிடம்  அவர்களின் பணிக்கு இடையூறாக பணம் பறிக்கும் நோக்கத்தில் பொய்யான புகார்களை மாவட்ட நிர்வாகத்திற்கு கொடுத்தும், மேலும் எங்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் வருகின்றனர். இதனால் எங்களால் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலை தொடர்கிறது. 

சட்டபூர்வமாக உரிமம் பெற்று தொழில் செய்து வரும் எங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் பணம் பறிக்கும் முயற்சியில் சமூக போராளிகள் என்கிற போர்வையில் மிரட்டல் போக்கை கையாளுகின்றனர் அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இயங்கி வரும் கல்குவாரிகளில் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கும் பொழுது நிர்ணயிக்கப்பட்ட அளவு ஆழம்தான் கல் உடைத்து எடுக்க வேண்டும் என்று புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த பழைய நடைமுறைப்படி கல்குவாரி தொழில் இயங்க அரசு அனுமதிக்க வேண்டும். குவாரிகளில் உடைத்தெடுக்கப்படும் கற்களுக்கு உரிய பர்மிட் தொகை செலுத்திட தயாராக உள்ளோம். கள ஆய்வு என்கின்ற பெயரில் அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி கல்குவாரிகளுக்கு வந்து ஆய்வு நடத்தி எங்களை அச்சுறுத்தக் கூடாது. முன்கூட்டியே தகவல் தெரிவித்து வந்தால் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர நாங்கள் தயாராக உள்ளோம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் இன்று திங்கள்கிழமை (ஜூன் 26) தொடங்கியுள்ளது என்றனர். 

கல் குவாரி உரிமையாளர்கள் போராட்டத்தால் மூலம் தமிழக அரசுக்கு நாள்தோறும் ரூ. 20 கோடிக்கு மேல் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.