காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

பொறியியல் தரவரிசையில் திருச்செந்தூர் மாணவி மாநில அளவில் முதலிடம்!

திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பா.நேத்ரா பொறியியல் தரவரிசையில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதடை படைத்துள்ளார்.

Published On :

திருச்செந்தூர்: திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பா.நேத்ரா பொறியியல் தரவரிசையில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதடை படைத்துள்ளார். மேலும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கடந்த கல்வியாண்டில் இப்பள்ளி மாணவி பா.நேத்ரா 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 598 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.  மாணவி பெற்ற மதிப்பெண்கள்  விபரம் : தமிழ்    99, ஆங்கிலம் 99, இயற்பியல்     100, வேதியியல் 100, கணினி அறிவியல்    100, கணிதம்    100 ஆகும். 

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட பொறியியல் தரவரிசையில் மாணவி பா.நேத்ரா மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். 

மாணவிக்கு பள்ளி தாளாளர் மருத்துவர் அ.ராமமூர்த்தி, முதன்மை முதல்வர் இரா.செல்வவைஷ்ணவி, முதல்வர் ஜீனத் மற்றும் ஆசிரியர்கள். பெற்றோர்கள் மற்றும் சக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.