மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காலை சிற்றுண்டி திட்டம்: உணவு பட்டியல் மாற்றியமைப்பு

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தின் உணவு பட்டியல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

News image
கோப்புப் படம்.
Updated On :26 ஜூன் 2023, 5:04 am

DIN

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தின் உணவு பட்டியல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் சாா்பில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 5 வரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உப்புமா, கிச்சடி, பொங்கல் உள்ளிட்டவைகளில் சிறுதானிய உணவுகளை சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக சமூகநலத்துறை முதன்மைச்செயலர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வாரத்தில் 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானிய உணவுகளை வழங்க வேண்டும். உப்புமா, கிச்சடி, பொங்கல் உள்ளிட்டவைகளில் சிறுதானிய உணவுகளை சேர்த்து வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

குறிப்பாக அரிசி, கோதுமை, ரவா, சேமியா, சிறுதானியம், பருப்பு, காய்கறி ஆகியவை அடங்கிய உணவு வழங்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.