ஆறுகளில் முறை வைக்காமல் தண்ணீர் வழங்கக்கோரி காத்திருப்புப் போராட்டம்

ஆறுகளில் முறை வைக்காமல் தண்ணீர் வழங்கக்கோரி காத்திருப்புப் போராட்டம்

ஆறுகளில் முறை வைக்காமல் தண்ணீர் வழங்கக்கோரி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

திருவாரூர்: ஆறுகளில் முறை வைக்காமல் தண்ணீர் வழங்கக்கோரி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் குறுவைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆறுகளில் போதிய அளவு தண்ணீர் வரத்து இல்லை என விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே ஆறுகளில் முறை வைக்காமல் தண்ணீர் வழங்கக் கோரி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மேட்டூர் அணையிலிருந்து 18,000 கன அடி தண்ணீரை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com