இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ ரூ.60!

தமிழகத்தில் உள்ள பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 7:13 pm

DIN

சென்னை: தமிழகத்தில் உள்ள பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் வரையில் கிலோ ரூ.25 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி, சென்னை போன்ற பெருநகரங்களில் திங்கள்கிழமை ரூ.90 முதல் ரூ.100-ஐ தொட்டது.

வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்த காரணத்தாலேயே விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு, நாளொன்றுக்கு 60 லாரிகளில் தக்காளி வந்த நிலையில், இப்போது 42 லாரிகளில் மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.

இதனிடையே, தக்காளி விலையை கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பண்ணை பசுமை கடைகளில் கொள்முதல் விலையில் தக்காளி விற்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 62 பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும், வழக்கத்தைவிட 15 சதவீதம் தக்காளி கூடுதலாக கொள்முதல் செய்யப்படுவதாகவும், சில்லரை வியாபாரக் கடைகளில் கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.