காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேட்டூர் அணை நீர்வரத்து 226 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணை நீர்வரத்து புதன்கிழமை காலை 226 கன அடியாக அதிகரித்துள்ளது.

News image

மேட்டூர் அணை (கோப்புப் படம்)

Updated On :28 ஜூன் 2023, 2:45 am

DIN

மேட்டூர் அணை நீர்வரத்து புதன்கிழமை காலை 226 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 126 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து புதன்கிழமை காலை 226 கன அடியாக  சற்று அதிகரித்துள்ளது.  

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 13,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் புதன்கிமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 93.32 அடியில் இருந்து 92.40 அடியாக சரிந்துள்ளது. நாளொன்றுக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் சுமார் ஒரு அடி வரை சரிந்து வருகிறது.

அணையின் நீர் இருப்பு 55.43 டி.எம்.சி ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.