புதுச்சேரி முதல்வருடன் மோதல் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

புதுச்சேரி முதல்வருடன் மோதல் எதுவும் இல்லை என்று புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். 
புதுச்சேரி முதல்வருடன் மோதல் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

திருநெல்வேலி: புதுச்சேரி முதல்வருடன் மோதல் எதுவும் இல்லை என்று புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். 

புதுவையில் கடந்த 18 ஆண்டுகளாக பணியிலிருப்பவா்களுக்கான கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை என்பதைக் கூறுவதற்கு கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் முதல்வா் கூறினால் அந்தப் பணி உடனே நடைபெறும். ஆனால், இப்போது அப்படியல்ல. குறிப்பிட்ட விழாவுக்கு சென்றாலே, கல்வெட்டில் பெயா் இருக்கிா? என்பதைப் பாா்க்க வேண்டியுள்ளது. பல அதிகாரிகள் விருப்ப ஓய்வு கோருகிறாா்கள். மின் துறையில் அதிகாரிகள் விடுப்பில் செல்கின்றனா்.

அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால் சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்களைக் கூட நிறைவேற்ற முடியவில்லை என முதல்வா் என். ரங்கசாமி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் புதுச்சேரி முதல்வருடன் மோதல் எதுவும் இல்லை என்று திருநெல்வேலி புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். 

நெல்லையப்பர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரிக்கு கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு ரூ.2000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.13 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 65,000 பெண்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை தமிழகத்தில்  செயல்படுத்துவது காலதாமதம் ஆகிறது. 

முதல்வர், செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் அவ்வாறு பேசி இருக்கலாம்.

நீதிமன்றத்தில் தடையாணைகளும் வழிகாட்டுதல்களும் உள்ள காரணத்தினால் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியவில்லை. இதே பிரச்னை தமிழகத்திலும் இருந்து வருகிறது.

அதிகாரிகள் மெத்தனமாக செயல்படலாம். அவர்களை விரைவாக பணி செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரி என சொல்லி இருந்தார். நான் அதை பாஸ்ட் புதுசேரியாக மாற்ற முயற்சி எடுத்து வருகிறேன்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நான் பக்தையாக சென்று சுவாமி தரிசனம் செய்யும் போது கூட சில பிரச்னைகள் இருந்தது.

அரசும் தீட்சிதர்களும் அமர்ந்து பேசி இந்த பிரச்னைக்கு முடிவு காண வேண்டும்.

நடராஜர் அனைவருக்கும் பொதுவானவர். அனைவரும் சுவாமி தரிசனம் செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குலசேகரபட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளத்தின் மூலம் 10 முதல் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

தூத்துக்குடியில் மக்களவை வேட்பாளராக போட்டியிட்டபோது தூத்துக்குடிக்கு புல்லட் ரயில் கொண்டு வருவேன் என அறிவித்தேன். அதனை பலரும் கேலி கிண்டல் செய்தனர். தற்போது ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்திலிருந்து வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்தது தொடர்பான கேள்விக்கு, இந்தியாவில் 86 ஆயிரம் ஸ்டார்-அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது . இதன் காரணமாக பல இளைஞர்கள் வேலை கொடுக்கும் இடத்தில் அமர்ந்துள்ளனர்.

2025 இல் இந்தியாவின் பொருளாதாரம் ஐந்து ட்ரில்லியன் டாலருக்கு உயரும் என உலகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற நாடுகளை இந்தியா சார்ந்து இருந்த நிலை மாறி இந்தியாவை மற்ற நாடுகள் சார்ந்திருக்கும் நிலை உருவாகி வருகிறது என்று தமிழிசை தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com