தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கோலாகலம்! சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்

பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டிலும் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மசூதிகளில் இன்று சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கோலாகலம்! சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டிலும் அனைத்து பகுதிகளிலும் உள்ள மசூதிகளில் இன்று சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்று ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டனர். 

ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

அதுபோல நெல்லை மேலப்பாளையத்தில் பஜார் திடல், மாநகராட்சி மைதானம், பாளையங்கோட்டை, கேடிசி நகர் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு கூட்டுத்தொழுகை நடைபெற்றது. ஜின்னா திடலில் நடைபெற்ற தொழுகையில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல்வகாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுபோன்று நெல்லை மாவட்டத்தில் ஏர்வாடி, களக்காடு, பத்தமடை, பேட்டை, என இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் பக்ரீத் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது . 

பக்ரீத் பண்டிகையையொட்டி சேலத்திலும் உள்ள முக்கிய மசூதிகளிலும் சிறப்புத் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சேலம் சூரமங்கலம் ஜாகிர் அம்மாபாளையம் அருகில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் கீழவாசல் அண்ணா திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்ற தொழுகையில் 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் பங்கேற்றனர். 

புதுச்சேரியிலும் சுல்தான்பேட்டை பள்ளி வாசல், ஜிம்மா மசூதி, காரைக்காலில் உள்ள பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் இன்று காலை 7 மணிமுதல் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. 

மதுரையில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான மசூதியான கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மசூதியில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. 

இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் அந்தப்பகுதிகளில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com