சென்னை மாநகர காவல் ஆணையராக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!

சென்னை பெருநகர காவல் துறையின் 109-ஆவது ஆணையராக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா் நியமனம் செய்யப்பட்டாா்.
சந்தீப் ராய் ரத்தோர் (கோப்புப் படம்)
சந்தீப் ராய் ரத்தோர் (கோப்புப் படம்)

சென்னை பெருநகர காவல் துறையின் 109-ஆவது ஆணையராக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா் நியமனம் செய்யப்பட்டாா்.

சென்னை பெருநகர காவல் துறை ஆணையராக பணியாற்றி வந்த சங்கா் ஜிவால், தமிழக காவல் துறை தலைமை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டாா். இதையடுத்து காவலா் பயிற்சி கல்லூரி டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை, சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக நியமனம் செய்து தமிழக உள்துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

புது தில்லியைச் சோ்ந்த சந்தீப் ராய் ரத்தோா், கடந்த 1992-ஆம் ஆண்டு ஐபிஎஸ் தோ்ச்சி பெற்று தமிழக காவல்துறையில் பணியில் சோ்ந்தாா். உதவி காவல் கண்காணிப்பாளராக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பணியைத் தொடங்கினாா்.

ஆவடியின் முதல் காவல் ஆணையா்: முக்கியமாக, திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளா், சென்னை காவல்துறையின் போக்குவரத்து இணை ஆணையா், மத்திய மண்டல இணை ஆணையா், திருச்சி சரக டிஐஜி, மதுரை சரக டிஐஜி, மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜி, தமிழக கடலோர பாதுகாப்பு குழும ஐஜி, சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி, தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய ஏடிஜிபி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளாா்.

சென்னை பெருநகர காவல்துறையை பிரித்து ஆவடி மாநகர காவல் துறையை கடந்த 2022-ஆம் ஆண்டு உருவாக்கியபோது முதல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோா் நியமிக்கப்பட்டாா். டிஜிபியாக பதவி உயா்த்தப்பட்டு காவலா் பயிற்சி கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட சந்தீப் ராய் ரத்தோா், இப்போது சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். கடந்த 2008, 2015-ஆம் ஆண்டுகளில் குடியரசுத் தலைவா் பதக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை சந்தீப் ராய் ரத்தோா் பெற்றுள்ளாா்.

சென்னை பெருநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோா் வெள்ளிக்கிழமை காலை பொறுப்பை ஏற்கிறாா்.

சந்தீப்ராய் ரத்தோர் யார்?

தில்லியைச் சேர்ந்த சந்தீப் ராய் ரத்தோர், பள்ளி, கல்லூரி படிப்பை அங்கேயே முடித்தார். கடந்த 1992ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று தமிழக காவல் துறையில் பணியில் சேர்ந்தார். உதவி காவல் கண்காணிப்பாளராக பணியை தொடங்கிய சந்தீப் ராய் ரத்தோர் தமிழக காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

முக்கியமாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சென்னை காவல்துறையின் போக்குவரத்து துணை ஆணையர், இணை ஆணையர், மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி, தமிழக கடலோர பாதுகாப்பு குழும ஐஜி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். சென்னை பெருநகர காவல்துறையை பிரித்து ஆவடி மாநகர காவல்துறையை கடந்த 2022ஆம் ஆண்டு உருவாக்கும்போது முதல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார்.

ஊனமாஞ்சேரி தமிழ்நாடு போலீஸ் அகாதெமிக்கு அண்மையில் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர், இப்போது சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2008, 2015ஆம் ஆண்டுகளில் குடியரசுத் தலைவர் விருதுகளை சந்தீப் ராய் ரத்தோர் பெற்றுள்ளார்.

பாரம்பரியமும், பழமையும் மிக்க சென்னை பெருநகர காவல் துறையின் 109-வது ஆணையராக நியமிக்கப்பட் சந்தீப்ராய் ரத்தோருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com