ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அரசியல் மாறுபாடுகள் அமைதிக்கான தடையாகக் கூடாது: மு.க. ஸ்டாலின்

அரசியல் மாறுபாடுகள் அமைதிக்கான தடையாக இருக்கக் கூடாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
Updated On :29 ஜூன் 2023, 4:04 pm

DIN


அரசியல் மாறுபாடுகள் அமைதிக்கான தடையாக இருக்கக் கூடாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மணிப்பூரில் உள்ள குடும்பங்களை நமது சொந்தங்களாகக் கருதி அவர்களின்  வாழ்க்கையில்  அமைதியை மீட்டளிப்பது நமது கூட்டான கடமையாகும். 

நம்மிடையே உள்ள அரசியல் மாறுபாடுகளோ பிற தடைகளோ அவர்கள்  வாழ்க்கையில் அமைதியைக் கொண்டு வருவதற்கான
முயற்சிகளுக்குத் தடை ஏற்படுத்தக் கூடாது. 

சகோதரர் ராகுல் காந்தியை மணிப்பூர் மக்களைச் சந்திக்க விடாமல் தடுப்பது என்பது முன்னேற்றத்திற்கான பாதையை மறிப்பதன்றி வேறில்லை.  

மணிப்பூர் உள்ள சகோதர சகோதரிகளுக்கு ஆறுதலும் அமைதியும் தேவை. அதற்கு அவர்களது குரலுக்குச் செவிசாய்ப்போம் எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.