

செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக அறிவித்திருந்த ஆளுநர் நடவடிக்கை தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
அமைச்சரவையிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குவதாக அறிவித்த ஆளுநர், பின்னர் அந்த உத்தரவை நிறுத்திவைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் அலுவல் பணிகள் முடிந்தவுடன், சட்ட வல்லுநர்கள் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.
வேலை வாங்கித்தருவதாக பலரிடம் பணம் வாங்கியது, பணமோசடி செய்தல் உள்ளிட்ட பல ஊழல் வழக்குகள் அவா் மீது உள்ளதை சுட்டிக்காட்டி, அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என். ரவி அறிவித்திருந்தார். பின்னர் அந்த உத்தரவை நிறுத்திவைப்பதாகவும் நள்ளிரவில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.