பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்: புதுச்சேரி முதல்வர் பங்கேற்பு!

புதுச்சேரியில் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது.

News image
Updated On :30 ஜூன் 2023, 7:46 am

புதுச்சேரியில் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டார். 

புதுச்சேரியை அடுத்துள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலின் அறங்காவல் குழு தலைவராக முதல்வர் ரங்கசாமி உள்ளார். 

கோவில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் மகா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. கடந்த இரண்டு நாள்களாக கணபதி ஹோமம், அனுக்ஞை ஹோமம் நடத்தப்பட்டு முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை, 
4-ம் கால யாக பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Story image

கோயில் கோபுரத்திற்கு சிவாச்சாரியார்கள்  பூஜைகளுடன் புனித நீர் ஊற்றி நன்னீராட்டு செய்தனர். தொடர்ந்து மூலவருக்கு முதல்வர் ரங்கசாமி புனித நீர் ஊற்றி, தீபாராதனை காட்டி சிவபெருமானுக்கு பூஜை செய்தார்.

இவ்விழாவில் புதுச்சேரி, வானூர் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோயிலில் அன்னதானத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். கோவில் கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் அறங்காவலர் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.