ஈரோடு கிழக்கு: 12 வேட்பாளர்கள் ஒரு வாக்குக்கூட பெறவில்லை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட 77 வேட்பாளர்களில் 12 வேட்பாளர்கள் இதுவரை வெளியான முடிவுகளின்படி ஒரு வாக்குக்கூட பெறவில்லை என்று தெரிய வந்துள்ளது.
ஈரோடு கிழக்கு: 12 வேட்பாளர்கள் ஒரு வாக்குக்கூட பெறவில்லை
ஈரோடு கிழக்கு: 12 வேட்பாளர்கள் ஒரு வாக்குக்கூட பெறவில்லை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட 77 வேட்பாளர்களில் 12 வேட்பாளர்கள் இதுவரை வெளியான முடிவுகளின்படி ஒரு வாக்குக்கூட பெறவில்லை என்று தெரிய வந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்தத் தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளதால் முடிவுகள் தாமதமாக வாய்ப்புள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி 2 சுற்றுகளின் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியான நிலையில், போட்டியிட்ட 77 பேரில் 12 வேட்பாளர்களுக்கு இதுவரை ஒரு வாக்குக்கூட பதிவாகவில்லை என்றும், அவர்களது கணக்கு பூஜ்யமாகவே இருந்ததாகவும் தெரிய வந்துளள்து.

ஈரோடு கிழக்கு பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானதைத் தொடர்ந்து, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

 திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்பட 77 பேர் போட்டியிட்டனர். வாக்குப் பதிவு பிப்ரவரி 27 -ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் 74.79 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.

இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளும், அதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.

16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பிற்பகலுக்குப் பிறகுதான் முடிவுகள் தெரியவரும். இறுதி முடிவுகள் அதிகாரபூர்வமாக மாலையில் அறிவிக்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com