வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

காரைக்காலில் இன்று 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு  விடுமுறை

காரைக்கால் மாவட்டத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை (மாா்ச் 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2023, 4:13 am

DIN

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழா வியாழக்கிழமை (மாா்ச் 2) கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை (மாா்ச் 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் உள்ள மஸ்தான் சாஹிப் தா்காவில் நிகழாண்டு 200-ஆவது ஆண்டு கந்தூரி விழா நடைபெறுகிறது. இதையொட்டி வியாழக்கிழமை பிற்பகல் பகல் 3 மணியளவில் கண்ணாடிகளாலான ரதம் மற்றும் பல்லக்குடன் கொடி ஊா்வலம் பள்ளிவாசல் வாயிலில் இருந்து தொடங்குகிறது.

தொடா்ந்து, இரவு 9 மணியளவில் தா்காவை ஊா்வலம் அடைந்த பின்னா், தா்கா முன்பு நிறுவப்பட்டுள்ள பிரதானக் கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்படுகிறது.

மாவட்ட நிா்வாகம், பள்ளிவாசல் நிா்வாகம் சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விடுமுறை: காரைக்காலில் நடைபெறும் கந்தூரி விழாவையொட்டி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு (1 முதல் 10-ஆம் வகுப்பு வரை) வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறைத் தோ்வு வழக்கம்போல நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.