கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

வளர்ச்சி ஒரு கண்; காலநிலை இன்னொரு கண்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், காலநிலை மாற்ற நிர்வாக குழுவுடன்  ஆலோசனை நடைபெற்றது.

மு.க. ஸ்டாலின்

Published On :


வளர்ச்சி ஒரு கண் என்றால், காலநிலை மாற்றம் இன்னொரு கண் என காலநிலை மாற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், காலநிலை மாற்ற நிர்வாக குழுவுடன்  ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
பாதிப்புகளைத் தடுப்பதற்காக வழிமுறைகள் குறித்தும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் செயல்திட்டம் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், நியூசிலாந்து நாடு புயலால் பெரும் துயரை சந்தித்து வருகிறது. இதுபோன்று உலகம்முழுக்க பல்வேறு நாடுகள் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. 

இனி வரும் மாதங்களில் கடும் வெப்ப அலைகளை நாடு சந்திக்கும் என இந்திய ஆய்வு மையம் தெரித்துள்ளது. புதிய புதிய நோய்களையும் சந்திக்கவுள்ளதாகவும் எச்சரித்துள்ளது. 

கடந்த டிசம்பர் மாண்டஸ் புயல் கரையை கடந்தபோதுதான் காலநிலை மாற்றக் குழு உருவாக்கப்பட்டது. வருமுன் காக்கும் அரசாக திமுக செயல்படுகிறது. 

சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுட்தும் வகையில், காலநிலை அறிவு இயக்கம் தொடங்கப்படும். தமிழ்நாடு எப்போது கார்பன் சமநிலையை அடையும் என்பதை காலநிலை மாற்றக் குழு தீர்மானிக்கும். வளர்ச்சி ஒரு கண் என்றால், காலநிலை மாற்றம் இன்னொரு கண். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும் காலநிலை மாற்ற கண்ணாடி கொண்டு ஆய்வு செய்த பிறகே செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.