குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் நகராட்சி அழகு நகர் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை வெள்ளிக்கிழமை காலை ஆய்வு செய்தார்.

News image

மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Updated On :3 மார்ச் 2023, 10:44 am IST

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் நகராட்சி அழகு நகர் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை வெள்ளிக்கிழமை காலை ஆய்வு செய்தார்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏ கே.பொன்னுசாமி இல்ல திருமண விழா, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை திருவுருவச் சிலை திறப்பு விழா, நாமக்கல் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை காலை நாமக்கல் வந்தார். 

Story image

மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடி உதயநிதி ஸ்டாலின்

முதலாவதாக நாமக்கல்  - திருச்சி சாலையில் உள்ள அழகுநகர் நகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்து, இன்று வழங்கப்பட்ட உணவின் தரத்தை அங்குள்ள மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள மாணவர்களுடன் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். 

மாணவர்களின் நோட்டுகளில் தனது கையெழுத்தை இட்டார். 

இந்த ஆய்வின்போது வனத்துறை அமைச்சர் எம். மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே. ஆர்.என். ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், நகராட்சி ஆணையாளர் கி.மு.சுதா  ஆகியோர் உடன் இருந்தனர். 

இதனைத் தொடர்ந்து சேந்தமங்கலம் ஜங்கலாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை அவர் தொடங்கி வைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.