ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மின் வேலியில் சிக்கி மூதாட்டி பலி

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மின் வேலியில் சிக்கிமூதாட்டி உயிரிழந்தது குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image
கோப்புப்படம்
Updated On :4 மார்ச் 2023, 7:54 am

DIN

நெய்வேலி: கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மின் வேலியில் சிக்கி
மூதாட்டி உயிரிழந்தது குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி வட்டம், மனம்தவிழ்ந்தபுத்தூர் காலனியில் வசித்து வந்தவர் சேட்டு மனைவி தனலட்சுமி(65). இவர், சனிக்கிழமை காலை வயல் வேலைக்கு புறப்பட்டுச் சென்றார்.

பொன்னங்குப்பம் கிராமம், மண்ணாங்கட்டி மகன் சுப்புராயன்(60) என்பவரது நிலத்தின் வழியாகச் சென்றபோது காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி தனலட்சுமி உயிரிழந்தார்.

இதை அறிந்த சுப்புராயன், இறந்து கிடந்த தனலட்சுமி உடலை அருகில் இருந்த செங்கல் சூளை அருகே கிடத்திவிட்டு, காட்டுப்பன்றி தாக்கியதில் இறந்து விட்டதாகக் கூறி சென்றுவிட்டார்.

தகவல் அறிந்த உறவினர்கள் சுமார் 50 பேர் செங்கல் சூளை அருகே ஒன்று திரண்டனர். அவர்கள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்து, சடலத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.