ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்பு!

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 போ், நிரந்தர நீதிபதிகளாக இன்று(திங்கள்கிழமை) பதவியேற்றுக்கொண்டனர். 

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :6 மார்ச் 2023, 6:05 am

DIN

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 போ், நிரந்தர நீதிபதிகளாக இன்று(திங்கள்கிழமை) பதவியேற்றுக்கொண்டனர். 

உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை, தில்லி, அலகாபாத் உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. 

அதன்படி, சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, டி.பாரத சக்கரவா்த்தி, ஆா்.விஜயகுமாா், முகமது சஃபீக், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோா் நிரந்தர நீதிபதிகளாக பதவி உயா்வு பெற்றுள்ளனர்.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரும் நிரந்தர நீதிபதிகளாக இன்று(திங்கள்கிழமை) பதவியேற்றுக்கொண்டனர். உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  

உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள், தங்களது 2 ஆண்டு பதவிக்காலத்துக்கு பிறகு நிரந்தர நீதிபதிகளாக பதவி உயா்த்தப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.