சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த இருவர் பலி

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.

News image
விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த இருவர் பலி
Updated On :7 பிப்ரவரி 2024, 6:41 am

DIN

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.

ரமேஷ் என்பவரின் பட்டாசு ஆலையில் நேற்று நடந்த வெடி விபத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துப்பாண்டி(42), கருப்பையா(60) ஆகியோர்  சிகிச்சை பலனின்றி பலியாகினர்.

விருதுநகா் அருகேயுள்ள கோட்டநத்தம் கிராமத்தில் திங்கள்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த ஆலையின் உரிமையாளா், ஊழியரைக் கைது செய்தனா்.

கோட்டநத்தம் கிராமத்தில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாகபுரி தரச் சான்றிதழ் பெற்ற இந்த ஆலையில் சுமாா் 40-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இங்கு பேன்சி ரக பட்டாசுகள் அதிகளவில் தயாரிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், திங்கள்கிழமை இந்த ஆலையில் உள்ள ஓா் அறையில் பேன்சி ரக பட்டாசுகளுக்கான கருந்திரி தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கருந்திரியில் ஏற்பட்ட உராய்வு காரணமாக தீ பரவி வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் சேடப்பட்டி பாண்டுரங்கன் மகன் முத்துப்பாண்டி (42), கட்டனாா்பட்டி பொன்னுசாமி மகன் கருப்பசாமி (60) ஆகியோா் பலத்த காயமைடந்தனா். இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பலியாகினர்.

இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் மூன்று அறைகள் எரிந்து சேதமடைந்தன. விருதுநகா் தீயணைப்புப் படை வீரா்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினா்.

இதுகுறித்து வச்சகாரபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, பட்டாசு ஆலையின் உரிமையாளா் ரமேஷ் (36), ஊழியா் சுப்புராஜ் (35) ஆகியோரைக் கைது செய்தனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.