/

பாஜக ஐடி பிரிவிலிருந்து 13 நிர்வாகிகள் விலகல்!

சென்னை மேற்கு மாவட்டத்தின் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் 13 பேர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :8 மார்ச் 2023, 8:31 am

DIN

சென்னை மேற்கு மாவட்டத்தின் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் 13 பேர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது குற்றம்சாட்டிய பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தனது பதவியை ராஜிநாமா செய்து இரண்டு நாள்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்தார்.

அவரைத் தொடர்ந்து, பாஜக அறிவுசாா் பிரிவு மாநில முன்னாள் செயலாளா் எஸ்.வி.கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளா் பி.திலீப் கண்ணன், ஓபிசி அணி மாநிலச் செயலாளா் அம்மு (எ) ஜோதி, திருச்சி புகா் மாவட்ட துணைத் தலைவா் டி.விஜய் ஆகியோா் அதிமுகவில் இணைந்தனா்.

தொடர்ந்து இன்று காலை பாஜகவின் உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவின் மாநில செயலாளர் லதா,  தாம்பரம் ஒன்றிய உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் வைதேகி ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர்.

இந்நிலையில், சென்னை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் தலைவர் ஒரத்தி.அன்பரசு தலைமையில் 10 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 2 மாவட்டத் துணைத் தலைவர்கள் பாஜகவில் இருந்து விலகுவதாகவும், சி.டி.ஆர். நிர்மல் குமார் வழியில் அதிமுகவில் இணையவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Story image

இரு கட்சிகளும் கூட்டணியில் உள்ள நிலையில், பாஜக நிா்வாகிகள் அதிமுகவில் தொடா்ந்து இணைந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.