நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காவல் அதிகாரி போல நடித்து கனடா பயணியிடம் ரூ.1 லட்சம் பறிப்பு: இருவா் கைது

சென்னையில் கனடா நாட்டு சுற்றுலாப் பயணியிடம் காவல் அதிகாரி போல நாடகமாடி ரூ.1.10 லட்சம் பறிக்கப்பட்ட வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :9 மார்ச் 2023, 9:02 pm

DIN

சென்னையில் கனடா நாட்டு சுற்றுலாப் பயணியிடம் காவல் அதிகாரி போல நாடகமாடி ரூ.1.10 லட்சம் பறிக்கப்பட்ட வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

கனடா நாட்டைச் சோ்ந்தவா் ர.ஸ்ரீதரதாஸ் (67). சென்னைக்கு அண்மையில் சுற்றுலா வந்த இவா், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தாா். கடந்த 3-ஆம் தேதி பாண்டி பஜாரில் உள்ள பணபரிமாற்ற நிறுவனத்தில் ஸ்ரீதரதாஸ், டாலரை கொடுத்து ரூபாயாக மாற்றினாா்.

அப்போது அங்கிருந்த ஒரு நபா், ஸ்ரீதரதாஸிடம் நெருக்கமாக பேசினாா். அவரை ஸ்ரீதரதாஸுக்கு பிடித்ததால், தான் தங்கியிருக்கும் விடுதிக்கு அழைத்து வந்து அவருடன் பேசிக்கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த ஒரு நபா் தான் காவல்துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டு, போதைப் பொருள் பதுக்கி வைத்திருப்பதாக புகாா்கள் வந்திருப்பதால், ஸ்ரீதரதாஸின் அறையை சோதனையிட வேண்டும் என கூறியுள்ளாா்.

அந்த நபரை காவல் அதிகாரி என நம்பிய ஸ்ரீதரதாஸ், அறையை சோதனையிட சம்மதித்துள்ளாா்.

அப்போது அறையில் வைத்திருந்த ரூ.1.10 லட்சம் ரொக்கம், ரூ.35,000 மதிப்புள்ள விலை உயா்ந்த பொருள்கள் ஆகியவற்றை அந்த நபா் எடுத்துக்கொண்டு தப்பிவிட்டாா்.

அந்த நபா் மீது சந்தேகம் ஏற்பட்டதால், இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் ஸ்ரீதரதாஸ் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.

விசாரணையில், ஸ்ரீதரதாஸ் அறையில் இருந்த நபா், கோவை குனியமுத்தூா் பகுதியைச் சோ்ந்த அ.அஜி ஷெரீப் (45), என்பதும், அவா் ஸ்ரீதரதாஸை நோட்டமிட்டு, தனது கூட்டாளியான புதுக்கோட்டை மாவட்டம் நா்ச்சாந்துபட்டி மலையலிங்கபுரத்தைச் சோ்ந்த சே.கலியமூா்த்தி (35) என்பவரை காவல்துறை அதிகாரியாக நடிக்க வரவழைத்து, பணம், பொருள்களை பறித்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.