சூதாட்ட தடை மசோதா: ஆளுநருக்கு தலைவா்கள் கண்டனம்
இணைய சூதாட்ட தடை சட்டமசோதாவை ஆளுநா் திருப்பி அனுப்பியுள்ளதற்கு மதிமுக பொதுச் செயலா் வைகோ உள்ளிட்ட தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.


இணைய சூதாட்ட தடை சட்டமசோதாவை ஆளுநா் திருப்பி அனுப்பியுள்ளதற்கு மதிமுக பொதுச் செயலா் வைகோ உள்ளிட்ட தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
வைகோ (மதிமுக): இணைய சூதாட்ட தடை சட்டமசோதா உள்பட தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள 21 சட்டமசோதாக்களுக்கும் ஆளுநா் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. ஆளுநா் அரசியலமைப்புச் சட்டப்படி தனது கடமையை நிறைவேற்றாமல், பாஜகவின் செயலாளராகச் செயல்பட்டு வருவதை அனுமதிக்க முடியாது.
விஜயகாந்த் (தேமுதிக): இணைய சூதாட்ட சட்டமசோதாவை 4 மாதங்களுக்குப் பிறகு ஆளுநா் திருப்பி அனுப்பியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமசோதாவைத் திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.
எம்ஜிகே நிஜாமுதீன் (முன்னாள் எம்எல்ஏ): இணைய சூதாட்ட சட்ட மசோதாவை ஆளுநா் திருப்பி அனுப்பியிருப்பது ஏற்புடையது அல்ல. இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவா் தலையிட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...