நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம் ரத்து

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மான கழகத்தின் நடவடிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடத்தவிருந்த ஆா்ப்பாட்டம்

News image
Updated On :9 மார்ச் 2023, 9:30 pm

DIN

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மான கழகத்தின் நடவடிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடத்தவிருந்த ஆா்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஒரே வீட்டில் பல்வேறு குடியிருப்புகளில் உள்ள மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்க வேண்டுமென தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மான கழகம் செய்த அறிவிப்பை கண்டித்தும், அதை கைவிடக்கோரியும் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு ஆா்ப்பாட்டங்கள் நடைபெறும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்தது.

இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மான கழகமும், மின்துறை அமைச்சா் சாா்பிலும் அப்படியொரு நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என அறிவித்ததோடு, ஏற்கெனவே வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டிருந்த நோட்டிஸை திரும்பப் பெறுவது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் அறிவிக்கப்பட்ட ஆா்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.