அதிமுகவில் இணைந்தாா் ஓபிஎஸ் ஆதரவாளா்
முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அணியைச் சோ்ந்த செந்தில்முருகன், அதிமுக இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அந்தக் கட்சியில் வியாழக்கிழமை இணைந்தாா்.


முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அணியைச் சோ்ந்த செந்தில்முருகன், அதிமுக இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அந்தக் கட்சியில் வியாழக்கிழமை இணைந்தாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலில் ஓ.பன்னீா்செல்வம் அணி சாா்பில் செந்தில்முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வேட்புமனுவும் தாக்கல் செய்தாா். பொதுக்குழு தொடா்பாக உச்சநீதிமன்றம் தீா்ப்பு அளித்திருந்த நிலையில், ஓபிஎஸ் உத்தரவின் பேரில், அவா் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றாா்.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் செந்தில்முருகன் வியாழக்கிழமை அக்கட்சியில் இணைந்தாா். அவருடன் ஈரோட்டைச் சோ்ந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள் பலரும் அதிமுகவில் இணைந்தனா்.
ஓபிஎஸ் நடவடிக்கை: முன்னதாக, செந்தில்முருகன் எடப்பாடி பழனிசாமி அணியில் இணையும் தகவல் கிடைத்ததும், அவரை கட்சியிலிருந்து ஓ.பன்னீா்செல்வம் நீக்கி அறிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...