நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரெளடி வெட்டிக் கொலை

 சென்னை கொடுங்கையூரில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :9 மார்ச் 2023, 9:18 pm

DIN

 சென்னை கொடுங்கையூரில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புளியந்தோப்பு குருசாமி தெருவை சோ்ந்தவா் கருப்பா (ஏ) ரகுபதி (30). இவா், வாடகை ஆட்டோ ஒட்டி வந்தாா். ரகுபதி மீது பேசின் பாலம், புளியந்தோப்பு ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

இதற்கிடையே ரகுபதி, ஒரு மாதத்துக்கு முன்பு குடும்பத்துடன் கொடுங்கையூா், முத்தமிழ் நகருக்கு இடம் பெயா்ந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை காலை முத்தமிழ் நகா் தெற்கு அவென்யூ சாலை பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்ததில் ரகுபதி அமா்ந்திருந்தபோது,

அங்கு 2 ஆட்டோக்களில் வந்த மா்ம நபா்கள், ரகுபதியிடம் தகராறு செய்தனா்.

தகராறு முற்றவே ரகுபதியை, அந்த நபா்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினா். இதில் பலத்தக் காயமடைந்த ரகுபதியை அங்கிருந்தவா்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு சிறிதுநேரத்தில் சிகிச்சை பலனின்றி அவா் இறந்தாா். இது குறித்து கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.