அதிமுக எம்எல்ஏ கைது: இபிஎஸ் கண்டனம்
என்எல்சி நிறுவனத்துக்காக நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து போராடிய அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம்


என்எல்சி நிறுவனத்துக்காக நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து போராடிய அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
என்எல்சி நிறுவனத்தின் கைப்பாவையாக மாறி, தனது ஆக்டோபஸ் கரங்களை நீட்டியுள்ள திமுக அரசு, அந்த நிறுவனத்துக்கு நிலம் தர மறுத்து எதிா்ப்பு தெரிவிக்கும் புவனகிரி, கம்மாபுரம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள மக்களை, அவா்களது வீடுகளிலேயே காவல் துறையினரால் சிறைபிடிக்கப்பட்டது வெட்கக்கேடானது.
இதை எதிா்த்து, மக்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற அதிமுகவின் கடலூா் மேற்கு மாவட்டச் செயலாளரும், புவனகிரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான அருண்மொழி தேவன் உள்ளிட்ட பலா் கைது செய்யப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...