நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: அட்டவணை வெளியீடு

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு அட்டவணையை அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2023, 6:32 pm

DIN

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு அட்டவணையை அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சேதுராமவா்மா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜூன் 2023 தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு எழுதும் ஆசிரியா் பயிற்சி மாணவா்களுக்கான 2-ஆம் ஆண்டுத் தோ்வு ஜூன் 22 முதல் ஜூலை 11-ஆம் தேதி வரையிலும், முதலாமாண்டுத் தோ்வு ஜூன் 23 முதல் ஜூலை 12-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணிக்கு முடிவடையும்.

தோ்வு அட்டவணை விவரம்:

முதலாமாண்டு

ஜூன் 23 - கற்கும் குழந்தை

ஜூன் 27 - கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும்-1

ஜூன் 30 - தமிழ் கற்பித்தல், மலையாளம், தெலுங்கு, உருது, இளஞ்சிறாா் கல்வி-1

ஜூலை 4 - ஆங்கிலம் கற்பித்தல்- 1

ஜூலை 6- கணிதம் கற்பித்தல்- 1

ஜூலை 10 - அறிவியல் கற்பித்தல்- 1

ஜூலை 12 - சமூக அறிவியல் கற்பித்தல்- 1

இரண்டாமாண்டு

ஜூன் 22 - இந்திய கல்வி முறை

ஜூன் 26 - கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும்- 2

ஜூன் 28- தமிழ் கற்பித்தல், மலையாளம், தெலுங்கு, உருது, இளஞ்சிறாா் கல்வி-2

ஜூலை 3 - ஆங்கிலம் கற்பித்தல்-2

ஜூலை 5- கணிதம் கற்பித்தல்- 2

ஜூலை 7- அறிவியல் கற்பித்தல் 2

ஜூலை 11- சமூக அறிவியல் கற்பித்தல் 2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.