காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 40 போ் கைது

சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 40 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 7:55 pm

DIN

சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 40 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தனிப்படையினா் கடந்த மாா்ச் 3 முதல் 9- ஆம் தேதி வரை 7 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 25 வழக்குகளைப் பதிவு செய்து, 40 பேரை கைது செய்துள்ளனா்.

இவா்களிடமிருந்து 103 கிலோ கஞ்சா, 38 கிலோ கஞ்சா சாக்லேட், 10 கிராம் மெத்தம்பெட்டமைன், 200 போதை மாத்திரைகள்,300 போதை ஸ்டாம்புகள், 5 கஞ்சா செடிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் ரூ.1.11 லட்சம் ரொக்கம், போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 6 இருசக்கர வாகனங்கள், ஒரு காா், 15 கைப்பேசிகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.