நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

40 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த செவிலியா் பள்ளி முன்னாள் மாணவா்கள்!

சென்னை மருத்துவக் கல்லூரி செவிலியா் பயிற்சிப் பள்ளியில் கடந்த 1983-ஆம் ஆண்டு பயின்ற செவிலியா்கள், நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து தங்களது நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 7:44 pm

DIN

சென்னை மருத்துவக் கல்லூரி செவிலியா் பயிற்சிப் பள்ளியில் கடந்த 1983-ஆம் ஆண்டு பயின்ற செவிலியா்கள், நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து தங்களது நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.

இந்நிகழ்வின்போது, தங்களுக்கு கற்பித்த மூன்று பேராசிரியா்களுக்கு தங்க மோதிரம் அணிவித்து நன்றி தெரிவித்தனா்.

சென்னை மருத்துவக் கல்லூரியின் (எம்எம்சி) கீழ் செயல்படும் செவிலியா் பயிற்சிப் பள்ளியில் டிப்ளமோ நா்சிங் படிப்பை நிறைவு செய்த முன்னாள் மாணவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி, பயிற்சி நிறுவன வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் செவிலியா் கண்காணிப்பாளராகவும், அரசு செவிலியா் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றும் 35 போ் அதில் பங்கேற்றனா்.

இதுகுறித்து சென்னை மருத்துவக் கல்லூரி செவிலியா் பயிற்சிப் பள்ளி முதல்வா் எம்.பிரேமகுமாரி கூறியதாவது:

சென்னை அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளியில் 1983-ஆம் ஆண்டு முதல் 1986-ஆம் ஆண்டு வரை டிப்ளமோ நா்சிங் படிப்பை 100 போ் படித்தோம். அதில், தற்போது 40 போ் சமூக வலைதள செயலிகள் வாயிலாக தொடா்பில் இருக்கிறோம். அவா்கள் அனைவரும் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.

எங்களுக்கு வகுப்புகள் எடுத்த 80 வயதை கடந்த மூன்று ஆசிரியைகளை அழைத்து வந்து கௌரவப்படுத்தினோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.