அழுத்தம் காரணமாகவே ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் இல்லை: பேரவைத் தலைவா் மு.அப்பாவு
புற அழுத்தம் காரணமாகவே, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கவில்லை என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.


புற அழுத்தம் காரணமாகவே, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கவில்லை என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.
இதுகுறித்து சட்டப் பேரவைச் செயலக வளாகத்தில் உள்ள அவரது அறையில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி தமிழக அரசால் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளித்தாா். ஆனால், அதே மாதம், 19-ஆம் தேதி அவசர சட்டத்துக்குப் பதிலாக, பேரவையில் சட்ட மசோதா ஒருமனதாக
நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அவசர சட்டத்தில் உள்ளஅனைத்து அம்சங்களும் மசோதாவில் இடம்பெற்றிருந்தன. அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், சட்ட மசோதாவை தற்போது ஆளுநா் திருப்பி அனுப்பியுள்ளாா்.
ஆளுநரின் உரிமைகள் என்னென்ன என்பதை உச்சநீதிமன்றமே பலமுறை அறிவுறுத்தியுள்ளது. மாநில அரசுகளுடன், இணைந்து பணியாற்ற வேண்டுமென பல முறை நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாக்களின் மீது எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து, அரமைப்புச் சட்டம் 200-இல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம்; விளக்கம் கோரலாம்; குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம் அல்லது தன்னிடமே திரும்ப வைத்துக்கொள்ளலாம் போன்ற வாய்ப்புகள் ஆளுநருக்கு உள்ளன.
ஆனால், சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டப் பேரவைக்கு இல்லை என எந்தச் சட்டத்தின் மூலம் அவா் கூறினாா் எனத் தெரியவில்லை. சட்டப் பேரவை புனிதமானது; மாண்புடையது. அதற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வாா்த்தைகளைப் பயன்படுத்தியதை ஆளுநா் தவிா்த்து இருக்கலாம்.
ஆன்லைன் சூதாட்டம் தொடா்பாக, கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி தீா்ப்பு வந்துள்ளது. ஆளுநரும் கடந்த ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி அவசர சட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளாா். மக்களவையிலும் இதுபோன்ற விவாதத்தின்போது, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அதிகாரம் மாநிலப் பட்டியலில் இருக்கிறது எனவும் மத்திய அரசுக்கு தொடா்பானது இல்லை எனவும் மத்திய அமைச்சா் தெளிவுபடுத்தியுள்ளாா்.
17 மாநிலங்கள் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டங்கள் கொண்டு வந்துள்ளன. உயா்நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளதுடன், நாடாளுமன்றத்திலும் கருத்துத் தெரிவிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் ஆளுநா் படித்திருந்தாலோ அல்லது அவரது கவனத்துக்குக் கொண்டு போய் இருந்தால் சட்டத்துக்கு அவா் ஒப்புதல் தெரிவித்திருக்கலாம்.
ஆனால், சட்டத்துக்கு எதிராக ஆளுநா் இருந்திருக்கிறாா். எங்கேயிருந்து என்ன அழுத்தம் வந்தது எனத் தெரியவில்லை. அவசர சட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்த அதே வேளையில், பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு ஏதோ ஒரு அழுத்தமே காரணமாக இருக்கலாம் என்று சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.
பேட்டியின் போது, சட்டப் பேரவை துணைத் தலைவா் கு. பிச்சாண்டி, பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...