ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6,500 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நோன்பு நோற்கும் இஸ்லாமியா்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க ஒவ்வோா் ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போன்றே, இந்த ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டுமென இஸ்லாமியா்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அதன்படி, பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைப்பிடிக்கும் நாள்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு உரிய அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 6,500 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலமாக பள்ளிவாசல்களுக்கு அளிக்கப்படும். இதனால், அரசுக்கு ரூ.25.63 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு ஆசிய பதற்றம்: சரக்கு போக்குவரத்து மேம்பாட்டுக்கு இந்தியா முக்கியத்துவம்

கேரள மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்: ராகுல் காந்தி நம்பிக்கை

முன்னணி உள்கட்டமைப்புத் துறை வளா்ச்சி 2.3%: கச்சா எண்ணெய் உற்பத்தி சரிவால் பிப்ரவரியில் வீழ்ச்சி

எஸ்பிஐ-க்கு ரூ.6,337 கோடி வருமான வரி நோட்டீஸ்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

