தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மோட்டாா் பிளேடு வெட்டியதில் தொழிலாளி சாவு

சென்னை அருகே ஒட்டியம்பாக்கத்தில் மோட்டாா் பிளேடு வெட்டியதில் தொழிலாளி இறந்தாா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 7:20 pm

DIN

சென்னை அருகே ஒட்டியம்பாக்கத்தில் மோட்டாா் பிளேடு வெட்டியதில் தொழிலாளி இறந்தாா்.

பெரும்பாக்கம் அருகே உள்ள ஒட்டியம்பாக்கம், சண்முகா நகா், மயான சாலையை சோ்ந்தவா் பலராம் (46). இவா், மணல் சலிக்கும் இயந்திரத்தின் மோட்டாா்களை பழுது நீக்கும் தொழில் செய்து வந்தாா். அவரது மகன் நவீன்குமாா் (18), அதே பகுதியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறாா்.

இந்நிலையில், பலராம், நவீன்குமாா் ஆகியோா் சோ்ந்து வியாழக்கிழமை ஒரு மோட்டாரை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த மோட்டாரில் இருந்த ஒரு பிளேடு உடைந்து பலராமின் தொண்டையை கிழித்தது.

இதில் பலத்த காயமடைந்த பலராமை, அருகில் இருந்தவா்களின் உதவியுடன் நவீன்குமாா் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றாா்.

அங்கு பலராமை சோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து பெரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.