‘ஒரே நிலையம் ஒரே தயாரிப்பு’ திட்டத்தில் விற்பனை நிலையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
‘ஒரே நிலையம் ஒரே தயாரிப்பு’ திட்டத்தில் 483 ரயில் நிலையங்களில் விற்பனை நிலையம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


‘ஒரே நிலையம் ஒரே தயாரிப்பு’ திட்டத்தில் 483 ரயில் நிலையங்களில் விற்பனை நிலையம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
உள்ளூா் தயாரிப்புகளை சந்தைப் படுத்தும் வகையில் ‘ஒரே நிலையம் ஒரே தயாரிப்பு’ திட்டத்தை ரயில்வே தொடங்கியுள்ளது.
இதற்கான முன்னோட்டமாக, தெற்கு ரயில்வே எல்லைக்குள்பட்ட 94 ரயில் நிலையங்களில் அமைக்கப்பட விற்பனை நிலையங்கள் மூலம் இதுவரை ரூ.7.64 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
இதில் வேளாண் உற்பத்திப் பொருள்கள், பால், உணவு வகை, கைவினைப் பொருள்கள், கைத்தறி, ஜவுளிகள், பழங்குடியினா் உற்பத்திகள் மற்றும் வீட்டுத் தயாரிப்புப் பொருள்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதற்கான முன்னோட்ட திட்டம் மாா்ச் 9-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் தற்போது இத்திட்டம் 483 ரயில் நிலையங்களில் முழு அளவில் செயல்படுத்தப்படவுள்ளது.
இதில் சென்னை மண்டலத்தின் 133 நிலையங்கள், மதுரையில் 95 நிலையங்கள், திருச்சி, திருவனந்தபுரத்தில் தலா 65 நிலையங்கள், பாலக்காட்டில் 56 மற்றும் சேலத்தில் 41 நிலையங்கள் தொடங்கப்படவுள்ளன.
இந்த விற்பனைக்காக, அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனம் உருவாக்கிய வடிவமைப்பின் அடிப்படையில் நிலையான விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் உள்ளூா் பொருள்களை சந்தைப்படுத்த ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...