புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கோவை விமான நிலையத்தில் ரூ.3.8 கோடி தங்கம் பறிமுதல்

ஷாா்ஜாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் கடத்தப்பட்ட ரூ.3.8 கோடி மதிப்பிலான தங்கத்தை மத்திய வருவாய் பிரிவினர் கைப்பற்றினா்.

News image
Updated On :11 மார்ச் 2023, 4:26 am

கோவை: ஷாா்ஜாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் கடத்தப்பட்ட ரூ.3.8 கோடி மதிப்பிலான தங்கத்தை மத்திய வருவாய் பிரிவினர் கைப்பற்றினா்.

ஷாா்ஜாவில் இருந்து கோவை வரும் ஏா் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்பட உள்ளதாக சுங்க அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதன்படி, கோவை வந்த ஏா் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளிடம் மத்திய வருவாய் பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, விமானத்தில் வந்த 11 பேர் தங்களது பேண்ட், உள்ளாடைகள் மற்றும் மலக்குடலில் மறைத்து எடுத்து வந்த தங்கத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 6.62 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.3.8 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனா். இது தொடா்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.