ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த 4 நைஜீரியர்கள் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த 4 நைஜீரியர்களை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

கோப்புப்படம்

Published On :7 பிப்ரவரி 2024, 12:14 pm IST

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த 4 நைஜீரியர்களை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

பின்னல் நகரமான திருப்பூரில் நைஜீரியா, கென்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்து இரண்டாம் தர பின்னலாடைகளை வாங்கி தங்களது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். 

அதிலும், குறிப்பாக ராயபுரம், ரயில் நிலையம், காதர்பேட்டை பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கான நைஜீரியர்கள் தங்கியுள்ளனர். இதில், சிலர் கடவுச்சீட்டு, விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பதாக திருப்பூர் வடக்கு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. 

இதன் பேரில் ராயபுரம் பகுதியில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் உபா(43), ஒபின்னா(32), அஃபாம் பாஸ்கல்(32), ஜான்பால் (34) ஆகிய 4 பேரும் சட்டவிரோதமாக உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்தது  தெரியவந்தது. 

இதையடுத்து, அவர்களைக் கைது செய்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.