தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி வஉசி கல்லூரி முன்பு வகுப்பை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவர்கள்.
தூத்துக்குடி வஉசி கல்லூரி முன்பு வகுப்பை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவர்கள்.

தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மாணவர் சங்கம் சார்பில் மனோண்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற இந்த வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில், தூத்துக்குடி வஉசி கல்லூரி, காமராஜ் கல்லூரி, பிஷப் கால்டுவெல் கல்லூரி ஆகிய கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

பல்கலைக்கழகத் தேர்வு கட்டணம் பேப்பர் ஒன்றுக்கு பட்டப்படிப்புக்கு ரூ.100லிருந்து ரூ.140 ஆகவும், பட்ட மேற்படிப்புக்கு ரூ.160 லிருந்து 220 ஆக உயர்த்தியுள்ளது. மறுகூட்டல் விண்ணப்பத்திற்கு ரூ.350 யிலிருந்து ரூ.550ஆகவும் உயர்த்தியுள்ளது. 

இது போன்று அனைத்து கட்டணத்தையும் அதிகமாக பல்கலைக்கழகம் உயர்த்தியுள்ளது. எனவே, பழைய தேர்வு கட்டணத்தை அமல்படுத்தாவிட்டால் மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிடுவோம் என இந்திய தூத்துக்குடி மாவட்டம் மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கார்த்திக் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com