

சென்னை: முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் விளைவாக, அரசுப் பள்ளிகளில் 1 முதல் 4 ஆம் வகுப்பு மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக, மாநில திட்டக்குழுவின் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்பை சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். இந்த அறிவிப்பின்படி, ‘மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்டிலேயே முன்னோடியாக ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இத்திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | காற்று மாசு பாதிப்பு: உலகில் எட்டாவது இடத்தில் இந்தியா!
மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படாமல் இருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயா்த்துதல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழ்நாட்டில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் விளைவாக, அரசுப் பள்ளிகளில் 1 முதல் 4 ஆம் வகுப்பு மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக, மாநில திட்டக்குழுவின் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களை ஒப்பிடும்போது, இந்தாண்டு ஜனவரி, பிப்ரவரியில் 1086 பள்ளிகளில் 20 சதவீதம் வரையும், 22 பள்ளிகளில் 40 சதவீதம் வரையும் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.