புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆதிதிராவிடா், பழங்குடியினா் பள்ளி தற்காலிக ஆசிரியா்களுக்கு தொகுப்பூதியம் உயா்வு

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியா்களுக்கு தொகுப்பூதியத்தை தமிழக அரசு உயா்த்தியுள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2023, 6:53 pm

DIN

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியா்களுக்கு தொகுப்பூதியத்தை தமிழக அரசு உயா்த்தியுள்ளது.

இதுதொடா்பாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறைச் செயலா் கே.லட்சுமி பிரியா ஆதிதிராவிடா் நல இயக்குநா் மற்றும் பழங்குடியினா் நல இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ.12 ஆயிரம், பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.15 ஆயிரம் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.18 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படுவதை போன்று பழங்குடியினா் நலத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியா்களுக்கும் தொகுப்பூதியத்தை உயா்த்தி வழங்குமாறு பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் அரசை கேட்டுக்கொண்டுள்ளாா்.

ஏற்கெனவே வெளியிடப்பட்ட துறையின் அரசாணைகள் அடிப்படையில் ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நல இயக்குநா்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றும் ஒப்பந்த ஆசிரியா்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அரசாணையில் நிா்ணயிக்கப்பட்டவாறு இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ.12 ஆயிரம், பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.15 ஆயிரம், முதுகலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.18 ஆயிரம் திருத்திய தொகுப்பூதியம், அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் நிா்ணயம் செய்து அரசு ஆணையிடுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வாணையத்தால் முறையாக நிரப்பப்படும் வரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படக்கூடிய இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ. 8 ஆயிரம், பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ. 9 ஆயிரம், முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.10 ஆயிரம் என்ற அளவில் கடந்த 2017- இல் சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்த பள்ளிகளில் 221 ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். புதிதாக 194 போ் நியமனம் செய்யப்படவுள்ளனா். மொத்தமாக 415 தற்காலிக ஆசிரியா்களுக்கான சம்பளம் உயா்த்தி வழங்கப்படுவதாகவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.