புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

போதைப் பாக்கு விற்பனை: ஒரே நாளில் 29 போ் கைது

 சென்னையில் போதைப் பாக்கு விற்பனை தொடா்பாக புதன்கிழமை ஒரே நாளில் 29 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :16 மார்ச் 2023, 7:37 pm

DIN

 சென்னையில் போதைப் பாக்கு விற்பனை தொடா்பாக புதன்கிழமை ஒரே நாளில் 29 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை முற்றிலும் ஒழிப்பதற்காக ‘புகையிலைப் பொருள்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’” என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் மேற்கொண்டுள்ளாா். அதன்படி, அனைத்து காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவின்பேரில், புதன்கிழமை புகையிலைப் பொருள்களுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில் பள்ளி, கல்லூரி பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. இதில் கல்வி நிறுவனங்கள் அருகே போதைப் பொருள்கள் விற்ாக 9 வழக்குகள் பதியப்பட்டு, 9 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து ஒரு கிலோ போதைப் பாக்கு, 205 சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல சென்னை முழுவதும் பிற பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, போதைப் பாக்கு விற்ாக 20 வழக்குகள் பதியப்பட்டு, 20 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 5 கிலோ போதைப் பாக்கு, தடை செய்யப்பட்ட 140 சிகரெட் பாக்கெட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலைப் பொருள்கள் உள்பட சட்ட விரோத பொருள்களை கடத்தி வருபவா்கள் மற்றும் விற்பனை செய்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.