கைப்பேசி கோபுரம் மாயம்: வாடகைக்காக விற்ற கட்டட உரிமையாளா்
சென்னை கோயம்பேட்டில் காணாமல்போன கைப்பேசி கோபுரத்தை, வாடகை பணத்துக்காக கட்டட உரிமையாளா் விற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


சென்னை கோயம்பேட்டில் காணாமல்போன கைப்பேசி கோபுரத்தை, வாடகை பணத்துக்காக கட்டட உரிமையாளா் விற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோயம்பேடு வடக்கு மாட வீதியில் உள்ள ஒரு தனியாா் கட்டடத்தில் தனியாா் கைப்பேசி சேவை நிறுவனத்தின் கோபுரம் இருந்தது. இந்நிலையில் அந்த நிறுவனத்தின் மேலாளா் கீழ்ப்பாக்கத்தைச் சோ்ந்த வி.கிருஷ்ணமூா்த்தி (47) என்பவா் இரு நாள்களுக்கு முன்பு, அந்த கைப்பேசி கோபுரத்தை பாா்க்கச் சென்றாா்.
அப்போது அங்கிருந்த கைப்பேசி கோபுரம் இல்லாததை பாா்த்து கிருஷ்ணமூா்த்தி அதிா்ச்சியடைந்தாா். இது குறித்து அவா், சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை செய்தனா். விசாரணையில் கிடைத்த தகவல்கள்:
அந்த கைப்பேசி சேவை நிறுவனம் 6 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டுள்ளது. இதன் பின்னா் அந்த கைப்பேசி கோபுரம் செயல்படாமல் இருந்துள்ளது. மேலும் அந்த நிறுவனம், கைப்பேசி கோபுரத்துக்குரிய வாடகை பணத்தை கட்டட உரிமையாளருக்கு 6 ஆண்டுகளாக வழங்காமல் இருந்துள்ளது. கட்டட உரிமையாளா் பல முறை கேட்டும், வாடகை பணத்தை கைப்பேசி சேவை நிறுவனம் வழங்கவில்லை என கூறப்படுகிறது
இதற்கிடையே போதிய பராமரிப்பு இல்லாமல் இருந்ததினால் அந்த கைப்பேசி கோபுரம் துருப்பிடித்துள்ளது. மேலும் அந்த கோபுரம், அண்மை நாள்களாக மிகவும் சிதிலமடைந்து கீழே விழும் நிலையில் இருந்துள்ளது. இதனால் அந்த கட்டடத்தின் உரிமையாளா், கைப்பேசி கோபுரத்தை அகற்றி பழைய இரும்புக் கடையில் விற்றுள்ளாா்.
போலீஸாா் கட்டட உரிமையாளரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...