தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வியாபாரியை தாக்கி வழிப்பறி: சிறுவன் உள்பட 5 போ் கைது

 சென்னை அரும்பாக்கத்தில் நகை வியாபாரியை தாக்கி வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :16 மார்ச் 2023, 7:36 pm

DIN

 சென்னை அரும்பாக்கத்தில் நகை வியாபாரியை தாக்கி வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கொருக்குப்பேட்டை, ஓஸ் வால் காா்டன் சிபி சாலை பகுதியைச் சோ்ந்தவா் தே.ராஜேஷ்குமாா் ஜெயின் (47). நகை வியாபாரியான இவா், கடந்த 13-ஆம் தேதி காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் நகைகளை விற்றுவிட்டு மீதியிருந்த ஒன்றே முக்கால் கிலோ நகைகள், ரூ.6.25 லட்சம் ரொக்கத்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்னைக்கு வந்துகொண்டிருந்தாா்.

அரும்பாக்கம் திருவீதியம்மன் கோயில் அருகே 3 இரு சக்கர வாகனங்களில் வந்த மா்ம நபா்கள் அவரை வழிமறித்து தாக்கி, அவா் வைத்திருந்த நகை, பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

இது குறித்த புகாரின்பேரில் அரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காஞ்சிபுரம் காமராஜா் நகரைச் சோ்ந்த மொ.காலிஷா (22), ரா.ரஞ்சித் (22), காஞ்சிபுரம் மாவட்டம் ஒலிமுகமது பேட்டைப் பகுதியைச் சோ்ந்த அ.ஹாரிப் முஸ்டாகிம் (22), மு.அப்துல்ஹமீது (21), அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து ஒரு கிலோ 677 கிராம் தங்க நகைகள், ரூ. 4 லட்சம் ரொக்கம், 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் முகம்மது அசாருதீன், காஞ்சிபுரம் பகுதியில் ஒரு நகைக் கடையில் வேலை செய்து வருகிறாா். இவா், நகை வியாபாரி ராஜேஷ்குமாா் ஜெயினை நோட்டமிட்டு, தனது நண்பா்கள் மூலம் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளாா்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் முகம்மது அசாருதீன் உள்பட 2 பேரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.